ஆழியாறு அருகே பள்ளத்தில் கார் பாய்ந்தது


ஆழியாறு அருகே பள்ளத்தில் கார் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 Aug 2021 10:14 PM IST (Updated: 11 Aug 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அருகே பள்ளத்தில் கார் பாய்ந்தது

பொள்ளாச்சி

கொரோனா பரவல் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஆழியாறுக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர். 

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பர்கள் வால்பாறைக்கு சுற்றுலா செல்வதற்கு காரில் வந்தனர்.

 பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அருகே உள்ள அன்பு நகர் பகுதியில்  வந்தபோது, வளைவில் கார் திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்து கம்பி வேலியை உடைத்துக் கொண்டு 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் வந்த 7 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story