குறிஞ்சிப்பாடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குறிஞ்சிப்பாடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் அஸ்மிதா(வயது 18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அஸ்மிதா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். நேற்று முன்தினமும் அஸ்மிதா வழக்கம்போல் செல்போனில் பேசியுள்ளார். இதை பார்த்த அவருடைய தாயார் தவமணி அஸ்மிதாவை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஸ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story