மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி நாகையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி நாகையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2021 10:20 PM IST (Updated: 11 Aug 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி நாகையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:-

மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி நாகையில், மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகை ரெயில் நிலைய வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்புக் குழு செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மாரியம்மாள், தவமணி, அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட துணைத்தலைவர் சிக்கந்தர், மாவட்ட குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ரெயில் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் மின்தூக்கி (லிப்ட்) மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைத்து தர வேண்டும். 

மானிய விலையில் பெட்ரோல்-டீசல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமேடை கட்டணம் உயர்வை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். மிசோராம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்குவது போல இந்தியா முழுவதும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story