கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
பொள்ளாச்சி
கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி வேண்டு கோள் விடுத்து உள்ளார்.
ஆணையாளர் ஆய்வு
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வீடு, வீடாக நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை கணக்கெடுப்பு பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 4,5,6 மற்றும் 12-வது வார்டுகளில் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சிவக்குமார் உடன் இருந்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கூறியதாவது:-
பொதுமக்கள் ஒத்துழைப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல், சுவை உணர்வு இல்லாமை, வாசனை நுகர்வு தன்மை இல்லாதது, உடல் வலி, தலைவலி உள்ளதா என்று கணக்கெடுக்கப்படுகிறது.
இந்த பணியில் 86 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணியின்போது அறிகுறிகள் உள்ள நபர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.
எனவே வீடுகளுக்கு கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அபராதம்
கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கழிவுநீர், மழைநீர் கால்வாய்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story