கார் டிரைவரிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்


கார் டிரைவரிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்
x
கார் டிரைவரிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்
தினத்தந்தி 11 Aug 2021 10:27 PM IST (Updated: 11 Aug 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கார் டிரைவரிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்

கருமத்தம்பட்டி

சூலூர் எஸ்.வி.எல் நகரைச் சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது36). கார் டிரைவர். நேற்று முன்தினம் காலை அருண்பிரசாத் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். 
அப்போது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை வங்கி அதிகாரி எனவும், உங்களது வங்கி கிரெடிட் கார்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் அதற்கு தற்போது ஒரு ஒ.டி.பி எண் வந்து இருக்கும் அதை கூறும்படியும் கேட்டுள்ளார். 

இதை உண்மை என நம்பிய அருண்பிரசாத் ஒ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். கூறியதும் அந்த அழைப்பானது துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அருண்பிரசாத் திருப்பி அந்த எண்ணிற்கு அழைத்துள்ளார். ஆனால் அழைப் பை ஏற்கவில்லை.  சிறிது நேரத்தில் அவருடைய செல்போனுக்கு வங்கியிலிருந்து ரூ.49 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு குறுஞ்செய்தி (மெசேஜ்) வந்துள்ளது. 

இதனால்அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் பரிந்துரையின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த  மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story