சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு


சின்னசேலம் அருகே  ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2021 10:51 PM IST (Updated: 11 Aug 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு



சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுந்தரவேல் மனைவி ஜெயக்கொடி(54). இவர் நேற்று அந்த பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரப்பு, வாய்க்கால் சீரமைக்கும் பணியில் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்தார். அப்போது திடீரென அவருக்கு சோர்வு ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள மரத்தடியில் படுத்து தூங்கினார்.

பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் சக தொழிலாளர்கள் ஜெயக்கொடியை எழுப்ப முயன்றபோது அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் ஜெயக்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயக்கொடி கடந்த 9-ந் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின்னர் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ள நிலையில் வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை நோய், குறைந்த ரத்த அழுத்த நோயும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story