மேலும் 73 பேருக்கு கொரோனா


மேலும் 73 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Aug 2021 10:57 PM IST (Updated: 11 Aug 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.

திருப்பூர், ஆக.12-
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர். 
73 பேருக்கு கொரோனா 
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
2 பேர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 754ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 67 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 21ஆக உள்ளது. 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 857 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 876-ஆக உள்ளது.

Next Story