கீழடி அகழாய்வில் வெளிவந்த அதிசய பாைன


கீழடி அகழாய்வில் வெளிவந்த அதிசய பாைன
x
தினத்தந்தி 11 Aug 2021 11:11 PM IST (Updated: 11 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கீழடிஅகழாய்வில் அதிசய பானை ஒன்று வெளியே வந்துள்ளது.

திருப்புவனம்,
ஆக.
கீழடிஅகழாய்வில் அதிசய பானை ஒன்று வெளியே வந்துள்ளது.
அதிசய பானை
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் தோண்ட, தோண்ட பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழர்கள், நாகரிகத்துடன் வாழ்ந்து இருப்பதை இந்த பொருட்கள் மெய்ப்பித்து காட்டுகின்றன.
இந்த நிலையில் கீழடியில் ஒரு குழியில் நேற்று மேலும் தோண்டிய போது பெரிய பானை வெளிப்பட்டது. தற்போது அந்த பானையின் கழுத்து, வாய் பகுதி மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற பகுதி பூமிக்குள் புதைந்துள்ளது. 
அந்த பானையின் வாய் பகுதி லேசாக உடைந்திருக்கிறது. வாய் பகுதி  சுற்றளவு 60 சென்டி மீட்டர் எனவும், அகலம் 30 சென்டி மீட்டர் எனவும் தெரியவருகிறது.
அரிய வகை பொருட்கள்
சற்று தடிமனாக பானையின் வாய் பகுதி உள்ளது. அதற்கு மாலை அணிவித்தது போன்று, சிறிய வளையங்களை கோர்த்து மண்ணால் அந்த ்காலத்திலேயே நேர்த்தியான அலங்காரம் செய்துள்ளனர்.
பானை நல்ல சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இன்னும் முழுமையாக தோண்டினால் தான் பானையின் முழுஉயரம் தெரிய வரும். அதோடு அந்த பானைக்குள் அரிய வகை பொருட்கள் ஏதேனும் இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். இவ்வளவு பெரிய பானையை பார்த்து அகழாய்வு பணி மேற்கொள்ளுபவர்களும் வியந்துள்ளனர். நீர்சேமிப்புக்காக இதுபோன்ற பானைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தொல்லியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Next Story