கரித்தொட்டி ஆலைக்கு சீல்


கரித்தொட்டி ஆலைக்கு சீல்
x
தினத்தந்தி 11 Aug 2021 11:11 PM IST (Updated: 11 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 4 தேங்காய் கரித்தொட்டி ஆலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூடிசீல் வைத்தனர்.

காங்கேயம்,
காங்கேயம் அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 4 தேங்காய் கரித்தொட்டி ஆலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூடிசீல் வைத்தனர்.
கரித்தொட்டி ஆலை
காங்கேயம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தேங்காய் சிரட்டையை எரித்து கரி உற்பத்தி செய்யும் ஆலைகள் செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளின் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வந்தது. மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது.
இந்த நச்சு ஆலைகளை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல வருடங்களாக காங்கேயம் தாசில்தாரிடமும், கலெக்டரிடமும் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, உதவிப் பொறியாளர் சத்யன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் காங்கேயம் பகுதியில் செயல்பட்டு வந்த 4 கரித்தொட்டி ஆலைகளுக்கு நேற்று சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
குழிகள்
இதன்படி காங்கேயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சி தொட்டியபட்டி பகுதியில் செயல்பட்டு வந்த லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான கரித்தொட்டி ஆலையில் 13 குழிகள் பாப்பினி ஊராட்சிக்கு உள்பட்ட வரதப்பம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான கரித்தொட்டி ஆலையில் 3 குழிகள், பாப்பினி ஊராட்சி, வரதப்பாம்பாளையம் காலனி பகுதியில் செயல்பட்டு வந்த கே.என்.சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் 5 குழிகள், வரதப்பம்பாளையம் பகுதியில் அர்ஜூனன் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் 2 குழிகள் என 4 கரித்தொட்டி ஆலைகளில் 23 கரித்தொட்டிக் குழிகள் மூடப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது காங்கேயம் வருவாய் ஆய்வாளர் கனகராஜ், நத்தக்காடையூர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகரன் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story