குடிசை வீடு எரிந்து சாம்பல்


குடிசை வீடு எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 11 Aug 2021 11:37 PM IST (Updated: 11 Aug 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.

சாயல்குடி,ஆக.
சாயல்குடி அருகே வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமணிச் செல்வம் (வயது 36). இவர் சாயல்குடி பக்கம் திட்டங்குளம் கிராமத்தின் அருகே குடிசை அமைத்து பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பனைத் தொழில் செய்து வருகிறார். நேற்று சமையல் வேலை செய்துவிட்டு அவரது மனைவி வெளியே சென்றார். திடீரென அங்கு தீப்பற்றி அங்கிருந்த சிலிண்டர் வெடித்து குடிசை முழுவதும் தீயில் கருகி சாம்பல் ஆனது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் குடிசை முற்றிலும் சேதமானது. மேலும் குடிசையில் இருந்த ரூ.20 ஆயிரம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி புத்தகம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகின. இது குறித்த புகாரின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story