உள்ளிருப்பு போராட்டம்
தாராபுரம் அருகே வாலிபரை கொன்ற கொலையாளிகளை கைது செய்யக்கோரி ஆதித் தமிழர் கட்சியினர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே வாலிபரை கொன்ற கொலையாளிகளை கைது செய்யக்கோரி ஆதித் தமிழர் கட்சியினர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிபர் படுகொலை
தாராபுரத்தை அடுத்த வீராட்சி மங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத் வயது21. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி மடத்துப்பாளையம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என கோபிநாத் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் நேற்று தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஆதித் தமிழர் கட்சியின் சார்பில் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆதி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் மாநில தலைமை கழக செயலாளர் சிவக்குமார், மாநில நிதி செயலாளர் விடுதலை வீரன் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், மாநில தொண்டரணி சங்க செயலாளர் புரட்சி செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story