வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாளுடன் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்,ஆக.
கடலாடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 30-ந்தேதி கடலாடி மங்கலம் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது அவர் 2½ அடி நீளம் உள்ள வாள் வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரிக்க முயன்றபோது போலீசாரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் அரியநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகுரு மகன் விநாயகமூர்த்தி (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன. இதனை தொடர்ந்து போலீசார் வாளை கைப்பற்றி விநாயகமூர்த்தியை கைது செய்தனர். இவர் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சந்திரகலா அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து விநாயகமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story