நாய் கடித்து புள்ளி மான் சாவு


நாய் கடித்து புள்ளி மான் சாவு
x
தினத்தந்தி 12 Aug 2021 12:02 AM IST (Updated: 12 Aug 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான் நாய் கடித்து பரிதாபமாக இறந்தது.

கீழக்கரை,ஆக.
கீழக்கரை, ஏர்வாடி, முந்தல், மாரியூர், வாலிநோக்கம், போன்ற பகுதிகளில் புள்ளிமான், முயல் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் இரை தேடி அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று தண்ணீர் குடிப்பதற்காக வந்த புள்ளி மான் ஒன்றை வெறிநாய் கடித்தது. இதில் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் புள்ளிமான் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்தனர். வனப் பகுதிகளில் தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து இது போன்று வன விலங்குகள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story