பிளாஸ்டிக் இல்லாத கொம்யூனாக பாகூரை மாற்ற முடிவு


பிளாஸ்டிக் இல்லாத கொம்யூனாக பாகூரை மாற்ற முடிவு
x
தினத்தந்தி 12 Aug 2021 12:03 AM IST (Updated: 12 Aug 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினம் முதல் பிளாஸ்டிக் இல்லாத கொம்யூனாக பாகூரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆக.
சுதந்திர தினம் முதல் பிளாஸ்டிக் இல்லாத கொம்யூனாக பாகூரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் முதல்...
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களான பைகள், குவளைகள், தட்டுகள் போன்ற பொருட்கள் இல்லாத பகுதியாக பாகூர் கொம்யூன் அறிவிக்கப்பட்டு    உள்ளது.  நாட்டின் 75-வது சுதந்திர தினமான வருகிற 15-ந்தேதி முதல் இந்த திட்டத்தை    அமல்படுத்த அறிவியல்  தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக    சுற்றுச்சூழல்   சீனியர் பொறியாளர்  ரமேஷ் மேற்பார்வையில் அதிகாரிகள் செல்வநாயகி, சாந்தலட்சுமி, பன்னீர்செல்வம், தினேஷ் ஆகியோர் அடங்கிய குழுவை துறை இயக்குனர் தினேஷ் கண்ணன் அறிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்
இதைத்தொடர்ந்து பாகூர் கொம்யூனில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அப்பகுதிகளில் உள்ள அனைத்து மதுபார் உரிமையாளர்களின்  ஆலோசனை கூட்டம் சுற்றுச்சூழல்துறை இயக்குனர்  தினேஷ் கண்ணன்    தலைமையில் அறிவியல்    தொழில்நுட்ப  சுற்றுச் சூழல் அலுவலகத்தில் நடந்தது.  இந்த கூட்டத்தில் சீனியர் பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் சுரேஷ் ராஜன், ஆணையர் கார்த்திகேயன், கலால்துறை அதிகாரி அருண் அய்யாவு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,  வருகிற சுதந்திர தினம் முதல் பாகூரை பிளாஸ்டிக் இல்லாத கொம்யூனாக   மாற்ற முடி வெடுக்கப்பட்டது

Next Story