295 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 295 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
ராமநாதபுரம்,ஆக
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 295 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் 12-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தேவையான ஆயத்த பணிகளில் ஈடுபடுமாறு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார். மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு வசதியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன் தினம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 295 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
குழு
அரசு எலைட் சிறப்பு பயிற்சி பள்ளியை சேர்ந்த 37 பேர், அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 85 பேர், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 144 பேர் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 29 பேர் என மொத்தம் 295 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகளின் தேர்வு கட்டணம் ரூ.1,500-ஐ சிறப்பு நிதி மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story