வேலூரில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூர்
வேலூர் கொணவட்டத்தில் ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் பகறக்கும்படை குழுவினர் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது மதினாநகரில் காலி இடத்தில் முட்புதரின் அருகே மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. பறக்கும்படை குழுவினர் சந்தேகத்தின்பேரில் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். 20 மூட்டைகளில் 50 கிலோ வீதம் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
அவற்றை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்து தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story