கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்


கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:15 AM IST (Updated: 12 Aug 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஜூன் 22-ந் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2-வது அணுஉலையில் மட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவில் 2-வது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 
தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணு உலைகளும் இயங்காததால் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

Next Story