ரூ.7 கோடி கடனை அடைக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்
ரூ.7 கோடி கடனை திரும்ப அடைக்க கேரள முதல்மந்திரி, கலெக்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சேலத்தில் கைதான விமானப்படை முன்னாள் ஊழியர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சேலம்,
ரூ.7 கோடி கடனை திரும்ப அடைக்க கேரள முதல்மந்திரி, கலெக்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சேலத்தில் கைதான விமானப்படை முன்னாள் ஊழியர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 முறை மர்ம நபர் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதே போன்று கேரள முதல்-மந்திரி மற்றும் சேலம், கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ்நாயர் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
முன்னதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட பிரேம்ராஜ்நாயர் பெங்களூரு விமானப்படையில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்து உள்ளார். பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு பணியை ராஜினாமா செய்த அவர் கடன் பெற்று முந்திரி பருப்பு ஏற்றுமதி தொழில் செய்து உள்ளார். இதில் ரூ.7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்டு உள்ளனர்.
உறவினர்கள், நண்பர்கள்
ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து உள்ளனர். ஆனால் இவரால் பணத்தை திரும்ப தர முடியவில்லை. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறித்து அதன் மூலம் கடனை கட்டி விடலாம் என்று இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் வேறு ஒருவர் செல்போன் மூலம் மிரட்டினால் போலீசாரால் தன்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து செல்போனை திருடி, அதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story