கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்


கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:27 AM IST (Updated: 12 Aug 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

தா.பழூர்:

ஆடிப்பூர வழிபாடு
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோன்று ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகிய நாட்களும் மிகவும் விசேஷமானதாகும்.
ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட கோவில்களில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வளையல் அலங்காரம்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு பட்டு வஸ்திரம் உடுத்தி பல்வேறு வகையான மலர்கள் மற்றும் வண்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த ஆண்டு கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக அம்மன் வீதி உலா நடைபெறவில்லை. மேலும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் எளிமையாக ஆடிப்பூர விழா நடைபெற்றது.

Next Story