கொரோனாவுக்கு 85 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 85 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 85 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 92 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்தது. அதன்படி மாவட்டத்தில் 85 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதில் சேலம் மாநகராட்சியில் 21 பேருக்கும், சேலம் ஒன்றியத்தில் 43 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 328 ஆக உள்ளது.
3 பேர் பலி
இதனிடையே நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 87 பேர் குணமாகி வீடு திரும்பினர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 843 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 43 வயது ஆண் மற்றும் 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 1,597 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story