மழை வேண்டி பால்குடம் எடுத்த பக்தர்கள்


மழை வேண்டி பால்குடம் எடுத்த பக்தர்கள்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:30 AM IST (Updated: 12 Aug 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், வருண பகவானுக்கு பூஜை செய்து வணங்கி, கருப்புசாமிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் பால்குடம் எடுத்து சென்றனர். அப்போது லேசான மழை தூறல் விழுந்தது. மேலும் பக்தர்கள் அம்மன், கருப்புசாமி, காளியம்மன், விநாயகர் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story