பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னை, ஊட்டிக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கம்


பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னை, ஊட்டிக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:33 AM IST (Updated: 12 Aug 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னை, ஊட்டிக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை வழியாக சென்னை மற்றும் ஊட்டிக்கு அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்ைக விடுத்தனர். இதையடுத்து பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னை மற்றும் ஊட்டிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. 
புதிய வழித்தடத்தில் அரசு விரைவு பஸ்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பழனி நாடார், ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாளர் கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு சென்னைக்கு புறப்படும் பஸ்சில் கட்டணமாக ரூ.635-ம், ஊட்டிக்கு புறப்படும் பஸ்சில் கட்டணமாக ரூ.520-ம் வசூலிக்கப்படுகிறது.

Next Story