முதியவரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்றவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்


முதியவரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்றவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:33 AM IST (Updated: 12 Aug 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

முதியவரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 60). இவர் நேற்று இரவு லெப்பைகுடிக்காடு - பென்னக்கோணம் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒருவர் பெரியசாமியை தலையில் தாக்கி, வழிப்பறி செய்ய முயன்றார். இதில் காயமடைந்த பெரியசாமி சத்தம் போட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து, அந்த நபரை பிடித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story