யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Aug 2021 1:36 AM IST (Updated: 12 Aug 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை, திப்பணம்பட்டி பஞ்சாயத்து பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர். ஊராட்சிக்கு முழு நேர ஊராட்சி செயலர் நியமிக்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் ஆணையாளர் (கிராம ஊராட்சி) திலகராஜ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story