கொரோனா தடுப்பூசி முகாம்
சிவகாசியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் 143 ரேஷன் கடைகள் உள்ளன. அதே போல் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட தாசில்தார் ராஜ்குமார் முடிவு செய்து அதற்கான சிறப்பு முகாம் நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள், ரேஷன்கடை ஊழியர்கள், பொதுமக்கள் என 85 பேர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமினை தாசில்தார் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் சமூகநல பாதுகாப்பு தனி தாசில்தார் ஆனந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் வைரக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story