சாவில் மர்மம் இருப்பதாக புகார்:கர்ப்பிணி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


சாவில் மர்மம் இருப்பதாக புகார்:கர்ப்பிணி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 12 Aug 2021 1:52 AM IST (Updated: 12 Aug 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

சாவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் கர்ப்பிணி உடல் தோண்டி எடுக்கப்பட்டது

கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கலியரான்விடுதி தொண்டைமான் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மோனிஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. மோனிஷா கர்ப்பமாக இருந்தார். கடந்த 7-ந் தேதி மோனிஷா திடீரென இறந்தார். இதை போலீசுக்கு தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து விட்டனர்.இதனிடையே மோனிஷா சாவில் சந்தேகம் இருப்பதாக  கலியரான்விடுதி கிராம நிர்வாக அதிகாரி சதீ்ஸ்குமார் கறம்பக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோனிஷாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை உதவி கலெக்டர் அபிநயா கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் மோனிஷா புதைக்கப்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உடல் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மீண்டும் மோனிஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் தோண்ட பட்டதை அறிந்து சுற்று வட்டார பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story