குமரியில் 9 இடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையம்


குமரியில் 9 இடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையம்
x
தினத்தந்தி 12 Aug 2021 2:52 AM IST (Updated: 12 Aug 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையாக 9 இடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையாக 9 இடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா 3-வது அலை
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 பேர் முதல் 30 பேர் மட்டுமே தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா 3-வது அலையை  தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கி உள்ளது. முதற்கட்டமாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. முக்கியமாக 3-வது அலையில் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
குழந்தைகள் பராமரிப்பு மையம்
அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சியில் 4 இடங்களிலும், தக்கலையில் 2 இடங்கள், கிள்ளியூர், முன்சிறை, களியல் ஆகிய 9 இடங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுபோக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 1,110 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தனி வார்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வெண்டிலேட்டர்களை பொறுத்த வரையில் 2-வது அலையில் பயன்படுத்திய வெண்டிலேட்டர்கள் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 125 வெண்டிலேட்டர்கள் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story