மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2021 3:01 AM IST (Updated: 12 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று கோட்டார் ரெயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் மனோகர ஜஸ்டஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் தங்ககுமார், லெவிங்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான ரெயில் கட்டண சலுகைகளை ரத்து செய்யக்கூடாது, மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு ரெயில் பெட்டிகள் அமைக்க வேண்டும், பிளாட்பார கட்டணத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலை  உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story