காட்டுப்புத்தூர் அருகே சோளத்தட்டை தீப்பிடித்ததில் 4 ஆடுகள் கருகி செத்தன; 3 மாடுகள் தீக்காயம்
காட்டுப்புத்தூர் அருகே சோளத்தட்டை தீப்பிடித்ததில் 4 ஆடுகள் கருகி செத்தன. 3 மாடுகள் தீக்காயம் அடைந்தன.
காட்டுப்புத்தூர்,
காட்டுப்புத்தூர் அருகே சோளத்தட்டை தீப்பிடித்ததில் 4 ஆடுகள் கருகி செத்தன. 3 மாடுகள் தீக்காயம் அடைந்தன.
திடீர் தீ
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கல்லூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). இவர் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சோளத்தட்டையில் திடீரென தீப்பிடித்தது.
அது ஆடு, மாடுகள் கட்டி இருந்த கொட்டகையிலும் பரவியது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றதுடன், முசிறி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
4 ஆடுகள் செத்தன
இந்த தீவிபத்தில் 4 ஆடுகள் தீயில் கருகி செத்தன. மேலும் 3 மாடுகள் தீக்காயம் அடைந்தன. சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள சோளத்தட்டைகளும் எரிந்து சாம்பலானது. ஆனால் தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த தொட்டியம் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story