ரெயில்வே துறையில் பறிக்கப்பட்ட சலுகையை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்


ரெயில்வே துறையில் பறிக்கப்பட்ட சலுகையை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2021 8:47 AM IST (Updated: 12 Aug 2021 8:48 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறையில் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொரப்பூர்,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தர்மபுரி ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கரூரான் தலைமை தங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், துளசிமணி, இளங்கோ, சுசிலா, லட்சுமணன், வெங்கடாசலம், இடும்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.

இதேபோன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க அரூர் குழு சார்பில் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிசுபாலன், உதயகுமார், சர்மிளா, ரங்கசிவம், மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி கோவிந்தம்மா வரவேற்றார். இதில் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து, அரூர் வட்ட செயலாளர் வேடியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பாலக்கோடு ெரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் செட்டியப்பன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் திம்மன், கிளை தலைவர் நாகராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த ரெயில் கட்டண சலுகை பயணங்கள் பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும். சாதாரண காலங்களை விட கூடுதல் கட்டணம் செலுத்தி அவசர தேவைக்கு பயணிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதை ரத்து செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்துவிட வேண்டும். புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியத்தில் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story