ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது


ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 8:48 AM IST (Updated: 12 Aug 2021 9:30 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரெயில்வே கேட் அருகே மறைவிடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கென்னடிகுப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 30), மதன் (33), ஸ்ரீராம் (37), வில்லியம் (46), குமரன் (40), செல்வம் (52), சுரேஷ் (30) நாச்சார்குப்பத்தை சேர்ந்த சிவலிங்கம் (48), சாமி (37) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.17 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story