2 செல்போன் கடைக்கு சீல்
2 செல்போன் கடைக்கு சீல்
பல்லடம்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 5ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இதன்படி பல்லடத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம், மளிகைக்கடைகள், தவிர அனைத்து கடைகளும் மாலை 5 மணியுடன் இயங்க தடை உள்ளது. இதற்கிடையியே நகராட்சிபகுதிகளில் அரசு அறிவித்தபடி அனுமதிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்படுகிறதா என நகராட்சி பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பல்லடம் பஸ்நிலையம் முன்பு உள்ள 2 செல்போன் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி செயல்பட்டதால் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
----
Reporter : P. Arjunan Location : Tirupur - Palladam
Related Tags :
Next Story