கோவில்பட்டியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல்
கோவில்பட்டியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி துளசிங்க நகரைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஆசிர்வாதம் (வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கும் மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் சேதுபதிக்கும் (24) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிர்வாதம் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சேதுபதி அவரை அவதூறாகப் பேசி, கத்தியால் தாக்க வந்தாராம். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டவுடன் சேதுபதி, ஆசிர்வாதத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடி விட்டாராம்.
சம்பவம் குறித்து ஆசிர்வாதம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து சேதுபதியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story