ரேஷன் அரிசி கடத்தல்


ரேஷன் அரிசி கடத்தல்
x
தினத்தந்தி 12 Aug 2021 5:25 PM IST (Updated: 12 Aug 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சரக்கு வேனில் 6 டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்
திருப்பூரில் சரக்கு வேனில் 6 டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வாகன தணிக்கை
திருப்பூர் காங்கேயம் ரோடு செரங்காடு பகுதியில் ரேஷன் அரிசி வேனில் கடத்துவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படையினருக்கும், திருப்பூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டுகள் தேவராஜ், செல்வக்குமார், முதல் நிலைக்காவலர் விஜயகுமார் மற்றும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பறக்கும்படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர் நேற்று காலை செரங்காடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது செரங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே சரக்கு வேன் வந்தது.
 ரேஷன் அரிசி கடத்தல்
அந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது வேனில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேன் டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஊத்துக்குளி கரைப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்வயது 26 என்பதும், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் பகுதியை சேர்ந்த பழனிசாமியை38போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை பழனிசாமி வாங்கி ஒரு வீட்டில் பதுக்கி வைத்து பின்னர், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கோழித்தீவனத்துக்காக அதிக விலைக்கு விற்பனை செய்ததும், அவ்வாறு விற்பனை செய்ய கடத்திச்சென்றபோது பிடிபட்டது தெரியவந்தது.
6 டன் அரிசி பறிமுதல்
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர். லாரியில் 50 கிலோ எடையுடன் 120 மூட்டைகளில் மொத்தம் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Next Story