நூலகத்தில் புத்தகங்களை வைக்க முடியாத அவலம்


நூலகத்தில் புத்தகங்களை வைக்க முடியாத அவலம்
x
தினத்தந்தி 12 Aug 2021 5:34 PM IST (Updated: 12 Aug 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

நூலகத்தில் புத்தகங்களை வைக்க முடியாத அவலம்

திருப்பூர்
திருப்பூர் பூங்கா சாலையில் திருப்பூர் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. விட்டல்தாஸ் சேட் என்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த இடத்தை 1954ம் ஆண்டு இதனை தானமாக வழங்கியுள்ளார். இதன் பின்னர் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் 23 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 
இதுபோல் 1 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 250 குறிப்புதவி நூல்கள் உள்ளன. தற்போது இந்த நூலகம் பல்வேறு வசதிகள் இன்றி இருந்து வருகிறது. இதுபோல் நூலகத்தில் புத்தகங்கள் வைக்க இடவசதியும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த வசதிகளை செய்துதர வேண்டும் என நூலகத்தின் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இது குறித்து வாசகர்கள் கூறியதாவது
புதிய நூல்கள் வினியோகம் செய்ய கூடுதல் கட்டிடம், புதிய நூல்கள் வினியோகம் செய்ய கூடுதல் கட்டிடம், புதிய நூல்கள் பண்டல் வைப்பதற்கு தனி அறை வேண்டும். ஒவ்வொரு முறை புதிய நூல்கள் வரும் போது வைப்பதற்கு இடமின்றி தவிக்கும் அவலநிலை உள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான புதிய புத்தக மூடைகள் நூலகத்தில் அடுக்கி வைக்க இடமின்றி படிக்கட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் உள்ளே அறைகளிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதால், நடந்து செல்ல சிரமமாக இருக்கிறது. 
போட்டி தேர்வு மாணவர்களுக்கு மதிய உணவு அருந்த தனி அறை ஏற்படுத்த வேண்டும். ஆடியோ மற்றும் கூட்ட அரங்குடன் வசதி வேண்டும். எனவே நூலகத்தை விரிவாக்க செய்ய வேண்டும். சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story