தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் மாணவமாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உதவித்தொகை
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசு முகமையினால் ஒற்றைச் சாளர முறையில் அதிக எண்ணக்கையில் சேர்க்கை நடைபெற்றாலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறாமல் அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
தகுதிகள்
தமிழகத்தில் இருப்பிடச் சான்று பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை பெற்றவர்களாகவோ, கல்வி உதவி பெறும் விவசாயிகளின் மகன்கள், மகள்கள், கல்வி உதவி பெறும் இறந்த அரசு பணியாளர்களின் மகள்கள், மகன்கள், கல்வி உதவி பெறும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள், மகள்களாக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கலாம்
தகுதியுடைய மாணவர்கள், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், குடியிருப்பு சான்று, வருமானச் சான்று, பிறப்பிட சான்று, ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்ட்ட ஆணை நகல், குடும்ப உறுப்பினர்கள் வயது, கல்வித்தகுதி மற்றும் வருமானம் ஆகிய விவரங்களுடன் அவரவர் பயின்று வரும் கல்லூரி முதல்வர் மூலம் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story