முகநூலில் பெண்ணின் புகைப்படத்துடன் வேறு ஒருவரின் செல்போன் எண்ணை இணைத்து அவதூறு பரப்பியவர் கைது


முகநூலில் பெண்ணின் புகைப்படத்துடன் வேறு ஒருவரின் செல்போன் எண்ணை இணைத்து அவதூறு பரப்பியவர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 6:55 PM IST (Updated: 12 Aug 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

முகநூலில் பெண்ணின் புகைப்படத்துடன் வேறு ஒருவரின் செல்போன் எண்ணை இணைத்து அவதூறு பரப்பியவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
முகநூலில் பெண்ணின் புகைப்படத்துடன் வேறு ஒருவரின் செல்போன் எண்ணை இணைத்து அவதூறு பரப்பியவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முகநூல்
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் முத்துலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் மகாராஜன். இவருக்கு சமீபகாலமாக பலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அவரை பெண் என்று நினைத்து ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசி உள்ளனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஜன், பேசியவர்களிடம் விசாரித்து உள்ளார். அப்போது, ஒரு முகநூலில் பெண்ணின் புகைப்படத்துடன் உங்களது செல்போன் எண்ணை இணைத்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனை பார்த்து தொடர்பு கொண்டதாக கூறி உள்ளனர். அதன்பிறகு மகாராஜன் அந்த முகநூலை பார்த்தபோது, அது உண்மையென தெரியவந்தது.
வாலிபர் கைது 
இதுகுறித்து மகாராஜன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முகநூல் கணக்கு யாருடையது என்று தொழில்நுட்ப ரீதியான விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம், வடக்கு பேய்குளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்கிருஷ்ணன் (27) என்பவர் போலி முகநூல் கணக்கை தொடங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மகாராஜனை பிடிக்காமல், அவருக்கு தொடர்ந்து செல்போன் அழைப்புகளை வரச்செய்து, அவருக்கு இடையூறு விளைவித்து களங்கம் ஏற்படுத்துவதற்காக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன், மகாராஜன் உபயோகப்படுத்தி வரும் செல்போன் எண்ணை குறிப்பிட்டு போலியாக முகநூலில் பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனர்.
------

Next Story