தஞ்சை மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 துணை தாசில்தார்களும் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
தஞ்சை விமானப்படை தள தனி தாசில்தார் (நிலஎடுப்பு) சக்திவேல், தஞ்சை தனி தாசில்தார் (வரவேற்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய மணிகண்டன், தஞ்சை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை தாசில்தாராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய ஜானகிராமன், கும்பகோணம் தனிதாசில்தாராக (தேசிய நெடுஞ்சாலை 45 சி) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய சுகுமார், பேராவூரணி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராவூரணி தாசில்தாராக பணியாற்றிய ஜெயலட்சுமி, தஞ்சை தனிதாசில்தாராக (ச.பா.தி.) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய இளமாருதி, கும்பகோணம் ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய பூங்கொடி திருவையாறு ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய மதுசூதனன், பாபநாசம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் தாசில்தார் கண்ணன், கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய சிவகுமார், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் செல்வம், கும்பகோணம் கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியயற்றிய ரவிச்சந்திரன் கும்பகோணம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய சுசீலா பட்டுக்கோட்டை வட்ட அலுவலக (ச.பா.தி.) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கணேஷ்வரன், பட்டுக்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா பேராவூரணி (ச.பா.தி.) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய ரமேஷ், தஞ்சை (முத்திரைத்தாள் கட்டணம்) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய அனிதா, தஞ்சை தனி தாசில்தாராக (தே.நெ.45சி) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கார்த்திகேயன், தஞ்சை துணை ஆய்வுக்குழு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய கஜேந்திரன் தனிதாசில்தாராக (முத்திரைத்தாள் கட்டணம்) நாகை அலகுக்கு மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய சுரேஷ் கலால் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தங்கபிரபாகரன் கும்பகோணம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாபநாசம் தாசில்தார் முருகவேல் குமப்கோணம் தனிதாசில்தாராக (ஆலய நிலங்கள்) மாற்றப்பட்டுள்ளார். ஒரத்தநாடு நில அளவை பயிற்சி தனி தாசில்தார் பார்த்தசாரதி, தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனிதாசில்தாராக (நில எடுப்பு) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய வில்சன் ஒரத்தநாடு தனிதாசில்தாராக (நிலஅளவை பயிற்சி) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன் தஞ்சை ஆதி திராவிர் நலத்துறை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளர் மீனா, கும்பகோணம் வட்ட அலுவலகத்தில் துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளர். இங்கு பணியாற்றிய விமல், மீனா பணியாற்றிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தஞ்சை வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளர் பரணிதரன், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய திப்புசுல்தான், பரணிதரன் பணியாற்றிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தார் செல்வம், பூதலூர் வட்ட அலுவலக துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி திரிபுரசுந்தரி, செல்வம் பணியாற்றிய இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். திருவையாறு உதவி வட்ட வழங்கல் அலுவலர் செல்வராணி, ஒரத்தநாடு வட்ட அலுவலக தேர்தல் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய செல்வகுமார், செல்வராணி பணியாற்றிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story