சேலத்தில், காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது


சேலத்தில், காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 7:50 PM IST (Updated: 12 Aug 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது ஆசிரியை புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை.

சூரமங்கலம், 

பெரம்பலூர் மாவட்டம் துறையூரை அடுத்த நாகநல்லூர் சுக்கலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் மன வளர்ச்சி குன்றிய வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி கொடுக்கும் ஆசிரியையாக பீகார் மாநிலத்தை சேர்ந்த லால்சிங்கின் மகள் சோனா குமாரி (28) என்பவர் பணியாற்றி வருகிறார். விஜயகுமாரும், சோனா குமாரியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் விஜயகுமாருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதைகேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சோனா குமாரி, இது தொடர்பாக விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சூரமங்கலம் அனைத்து் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story