அறநிலையத்துறைக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் மீட்பு
அறநிலையத்துறைக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் மீட்பு
துடியலூர்
சின்னதடாகம் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.8 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான செங்கல் செட்டுகள் இடித்து அகற்றப்பட்டன.
அறநிலையத்துறை இடம்
கோவையை அடுத்த சின்ன தடாகம் அருகே பழமையான மாரியம் மன் மற்றும் அங்காளம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்க ளுக்கு சொந்தமான 8.8 ஏக்கர் நிலம் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது.
அந்த நிலத்தை செந்தமிழ் அரசு, ரங்கராஜ் ஆகியோர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக செங்கல்களை அடுக்கி வைக்கும் செட்டுகளை அமைத்து தொழில் செய்து வந்தனர்.
இது அறிந்த இந்து சமய அற நிலையத் துறையினர் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து நோட் டீஸ் அனுப்பினர். ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை.
இடித்து அகற்றம்
இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்த மான இடங்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில் கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், ஆய்வாளர்கள் சரண்யா, சித்ரா, அன்னூர் தாசில்தார் கோகிலாமணி, துடியலூர் வருவாய் ஆய்வாளர் ஆகாஷ், சின்ன தடாகம் கிராம நிர்வாக அலுவலர் யமுனா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர்.
அவர்கள் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த செங்கல்களை அடுக்கி வைக்கும் செட்டுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
ரூ.50 லட்சம் மதிப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட செங்கல் அடுக்கும் செட்டுகளை இடித்து அகற்றினர்.
ரூ.6 கோடி மதிப்பு
அப்போது அங்கிருந்த செங்கல்சூளை தொழிலாளர்கள், நல்ல நிலையில் இருந்த மரக்கட்டைகள், செங்கல்கள், கான்கிரீட் தூண்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றனர்.
மீட்கப்பட்ட அற நிலையத்துறைக்கு சொந்தமான 8.8 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டு அந்த இடத்தில், இது அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இதற்கிடையே அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story