சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்


சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 12 Aug 2021 8:04 PM IST (Updated: 12 Aug 2021 8:04 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

கோவை

கோவையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றுகிறார். கொரோனா காரணமாக வ.உ.சி. மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வ.உ.சி. மைதானத் தில் கலெக்டர் சமீரன் தேசியக் கொடி ஏற்றுகிறார். 

இதற்காக வ.உ.சி. மைதானத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் மைதானத்தை சமப்படுத்தும் பணிகள் நடந்தன. அங்கிருந்த காய்ந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப் பட்டு, மைதானம் சுத்தம் செய்யப்பட்டது.

 இன்று (வெள்ளிக்கிழமை) கூடாரம் அமைத்து கொடிக்கம்பம் நடப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள் ரத்து

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின விழாவில் நடைபெறும் மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

சுதந்திர தினத்தன்று கலெக்டர் சமீரன் தேசியகொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் அவர், தியாகிகளை கவுரவிக்கிறார்.

விழாவில் குறைந்த அளவில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்களும் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் கூடங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 

சுதந்திர தின விழாவையொட்டி கோவை முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


Next Story