கோவில்பட்டி கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்


கோவில்பட்டி  கோவில் திருவிழாவை முன்னிட்டு  முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Aug 2021 8:57 PM IST (Updated: 12 Aug 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது

கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அன்னை பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழா, உறியடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விழாவில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.வி.எஸ்.வேல் முருகேசன், துணை தலைவர் ஏ.பெருமாள்சாமி, துணை செயலாளர் பி.வள்ளியப்பராஜ், பொருளாளர் கே.குமார் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story