பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய தண்டோரா மூலம் விழிப்புணர்வு
பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி:
தேனி அருகே கு.லட்சுமிபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், 19 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிதல், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் தண்டோரோ மூலம் நடந்தது.
இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முருகலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் முத்துபிரியதர்ஷினி, சிறப்பு பயிற்றுனர் முத்துப்பாண்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர். பள்ளிப் படிப்பை தொடராமலும், பள்ளியில் சேர்க்கப்படாமலும் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற்றுக் கொடுப்பது, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் நிவாரண நிதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story