காவேரிப்பட்டணத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காவேரிப்பட்டணத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2021 9:48 PM IST (Updated: 12 Aug 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி கீழ்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுல்தானா (வயது 21). இவருக்கும் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சையத் அஜித் பாஷாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி காலை தனது கணவர் வீட்டில் புதுப்பெண் சுல்தானா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உதவி கலெக்டர் விசாரணை
இது குறித்து சுல்தானாவின் தந்தை சையத் காதர் (60) கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 3 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
அதேபோல் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story