உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2021 9:56 PM IST (Updated: 12 Aug 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.


தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். இதில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த பிரசார வாகனம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்ய உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரேஸ்வரி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story