நில அபகரிப்பு புகார்: மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த குடும்பத்தினர்-போலீசார் விசாரணை
நில அபகரிப்பு புகார் கொடுப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த மாட்டியாம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற விவசாயியிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது தீக்குளிப்பு முயற்சி நோக்கத்துடன் பையில் மண்எண்ணெய் கேனை மறைத்து எடுத்து வந்து இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கிருஷ்ணன் குடும்பத்தினர் அளித்த புகார் மனுவில், எங்களுக்கு கிரையம் மூலம் பாத்தியப்பட்ட 21 சென்ட் நிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்து வருகிறோம். இந்த நிலையில் கடகத்தூரை சேர்ந்த சிலர் எங்கள் நிலத்தில் நுழைந்து சாகுபடி செய்திருந்த பயிர்களை அழித்து நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர். அதை தடுக்க முயன்ற எங்களை தாக்க முயன்றனர். எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story