புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள்.
புதுச்சேரி, ஆக.
புதுவையில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள்.
தொற்று பரிசோதனை
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 200 பேர், வீடுகளில் 714 பேர் என 914 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 59 பேர் குணமடைந்துள்ளனர்.
2 முதியவர்கள் பலி
மேலும் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெயின்போ நகரை சேர்ந்த 61 வயது முதியவர், மாகியில் 86 வயது முதியவர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,803 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 8 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 2 ஆயிரத்து 566 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்து 665 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story