கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகள் துண்டிப்பு
வரிபாக்கி வைத்துள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரி, ஆக.
வரிபாக்கி வைத்துள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
கேளிக்கை வரி
புதுவையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பலர் கேளிக்கை வரி பாக்கி வைத்துள்ளனர். அவர்களை வரிபாக்கியை செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியும் பலர் வரி பாக்கியை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1 கோடி வரிபாக்கி வைத்திருந்த 6 கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இணைப்பு துண்டிப்பு
அதன் தொடர்ச்சியாக தலா சுமார் ரூ.6 லட்சம் வரிபாக்கி வைத்துள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வருவாய் அதிகாரி முத்துசிவம் மற்றும் அதிகாரிகளை கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் கேபிள் டி.வி. வரிபாக்கி வைத்துள்ள அரவிந்தர் வீதி, பாரதிபுரம், வாணரப்பேட்டை, முருங்கப்பாக்கம், நைனார்மண்டபம், பாரதி மில் வீதி, தேங்காய்த்திட்டு, கொம்பாக்கம், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் கேபிள் டி.வி. இணைப்புகளை துண்டித்தனர்.
Related Tags :
Next Story