அரக்கோணம் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி


அரக்கோணம் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 12 Aug 2021 10:24 PM IST (Updated: 12 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி

அரக்கோணம்

அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கிராமம் நரிக்குறவர் பகுதியில் வசிப்பவர் முரளி. இவருடைய  மகள் தீபிகா (வயது 2). வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த தீபிகா அந்தப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததுவிட்டாள்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது குழந்தை தீபிகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story