உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது. 1.1.21-ந்தேதியில் 18 வயது நிரம்பிய, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள், எதிர்வரும் 2021 உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக www.nvsp.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தோ அல்லது சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்தை அணுகி படிவம் 6-யை பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்கி, தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்துக்கு முறையே படிவம் 7, 8 மற்றும் 8ஏ மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story